Sunday, 22 February 2026

எனக்கென பிறந்தது



எனக்கென பிறந்தது
 
உலகம் - நான் 
வரும்வரை நடந்ததே  
பெருந்தவம்! 


நொடிக்கென நிகழ்வுகள் 

தினம் - எனை 

வார்த்திட நடப்பதே அதும்! 


நிகழ்ந்தன கேட்டிட 

கதை, புதையலை 

கொட்டிடும் தினம்!


நான் நடந்திட 

திளைத்திடும் தரை! 

ஓடிட நீட்டுமே  

கரம்! 


தமிழ் சொற்களில் 

வழிந்திட சுவை... 

கேட்டிட தழுவிடும்  

வளி!


பல தூரமே 

உடைத்திடும் படி 

தினம் அறிவியல் 

செய்திடும் பணி! 



அதி காலையில் 

விழித்திட ஒளி! 

தாலாட்டவே மிதந்திடும் 

நிலவொளி!


எனை சுற்றியே 

சுற்றிடும் படி 

பிறந்ததோ பூமியுமடி!


என் விழி பட்டிடா 

பாகங்கள் தனில்... 

நோன்புகள் கிடந்தொரு

தவம்!


எனக்கென பிறந்தது 

உலகம் - நான் 

வரும்வரை காத்ததே   

தவம் 


நான் பிறந்திட 

கிடைத்தன வரம் 

என் கூடவே வாழ்ந்திட 

நிதம்

வேண்டுதல் கேட்டிடும் 

மண்டிலம் 

 

எனக்கென பிறந்தது 

உலகம் - எனை 

பெற்றதே பெற்றதே 

அதும்!

சொந்தத்தில் வீடு


 

[Intro]
வெள்ளி செவ்வாய்
ப்ளுட்டோ
குடியேற திட்டங்கள்!
வேறெங்கும் இடமிருக்கா
தொடருதே தேடல்கள்!
நெருக்கித்தள்ள தேவையில்லை
பிரபஞ்சம்
காத்திருக்கு நம்
காலு பட.   


[Verse 1]

புது வீடு சாவி ரெண்டு
தகதகன்னு மின்னுதடி!
வாசல் முன்னே
படமெடுப்போம்
ஆனந்தம் அள்ளும்படி... 
எனக்கொன்னு உனக்கொன்னு
கணக்கு உண்டா?
நமக்குன்னு வந்தது தான்
வாழ்க்கையடி 


[Verse 2]

புது வீடு கதவெல்லாம்
திறந்தபடி கனவுலகம்   
குடியேறி வருகிறதே !
என்காலு என் நிலத்தில்
நடந்தபடி
மேலேறி வான்வழியே
மிதக்குதடா !
நிலம் மேல கட்டிவைச்ச 
வீடு வந்தா 
குடம் குடமா அருவி கொட்டும்
மகிழ்ச்சியடா... 


[Chorus]

ஓடியாடா இடமிருக்கு
சுத்தி சுத்தி...
மரம் செடியும் நட்டுவைப்போம்
படரும் படி!
பக்கத்துல வீடெல்லாம்
கைகொடுப்போம் !
சொர்க்கத்துக்கு வழிகிடைச்ச
சேதிசொல்லி!



[Bridge]

புது வீடு சாவி ரெண்டு
தகதகன்னு மின்னுதடி !
வாசல் முன்னே
படமெடுப்போம்
ஆனந்தம் அள்ளும்படி!  


[Chorus]

இல்லமிது துரத்திடுமே
இல்லைகளை சுளுக்கெடுத்து
நல்ல வழி பிறந்ததுவே.
சாவி வழி வந்ததுவே!
சொந்தத்தில் வீடு
சொந்தத்தை கூட்டு...
கலகலன்னு பேசி
களைகட்டும்  நாட்கள்!

நீ நீடூழி வாழவே



விழ விழ விழுதினை 
விதைத்ததுன் வாக்குகள்!

எழுபவர் நிலைத்திட 

பிடிப்பதுன் ஊன்றுகோல்!


சிறு சிறு முயற்சியால் 

நீ கட்டிய கோட்டையில் 

பெரிதொரு வாழ்வினை 

பெருகவே வாழ்த்துக்கள்!


உடனிரு தருணங்கள் 

உன் சிந்தையால் பயன்பெற, 

வாழ்த்திடும் எம்நெஞ்சை 

வாகையே சூடினாய்!


கருத்தெலாம் நாளுமே 

தேடியே திரட்டுவாய்!

 

சேர்த்ததை பகிர்ந்ததில் 

சேர்த்திட்டாய் பெரும்பலம்!

 

பொறுப்புடன் நடந்திடும் 

நேர்மையே உன் பலம்!


வெறுப்புகள் வீசினால் 

உன் பொறுப்பதை மாய்த்திடும்!


உண்மையை பேசிடும் 

உன் எழுத்துகள் சொல்லிடும் 

நீ பட்டதை, பெற்றதை 

பெறவேண்டி விட்டதை!

 

சிலர் நீடூழி வாழ்வதில் 

உலகுக்கு பெரும்பயன்! 


உலகமே கற்றிடும் அவர் 

வழியது ஆகிடும்!


பெரும்பயன் வேண்டியே 

வாழ்த்துவோம்

நீ நீடூழி வாழவே!

மீட்டிடும் விரல்

மீட்டின விரலோ? 
பௌ ஸ்டிக் வருடலோ? 

வயலின் குரலோ? 


வலக்கை நெருட 

இடக்கை வசப்படும் 

கிட்டாரே நீயோ? 


அழுத்தும் இடத்தை 

விட்டுப்பிடித்தே வலமாய் 

வளம் வரும் சித்தாரோ?


வலமும் இடமும் 

சேர உழைத்தே  

இழைத்திடும்  ஹார்ப்போ? 


செல்லோ, பியானோ 

நரம்புகள் எத்தனை 

உன் விழி பார்வையில்?


உதடு தொடும் 

புல்லாங்குழல் நான் 

விரலிசை மீட்டிடு! 


தலையாட்டி நீ இசைக்க 

கூம்பிசை கருவிக்கும் உன்  

விரல்பட ஆசை! 


நாதஸ்வரம், காகளம்

டிட்ஜெரிடு எல்லாம் உன்வசம்... 

ஊதித் தள்ளேன்! 


எத்தனை எத்தனை 

விதமோ இசைக்க, 

எல்லாம் இனிக்கும்! 


அத்தனை அத்தனை 

இசைக்கும் விருப்பம் 

உன்பெயர் சொல்லிட! 


இன்னொரு கருவி 

பிறந்து வளர்ந்ததோ 

கூட உன்னிடம்? 


மீண்டிடும் வழியை 

சொல்லித் தந்தே 

தூண்டில் விடுவாயா?


மீட்டிடும் வழியோ 

அறிந்தவனில்லை... 

கற்றுக் கொடுப்பாயா?


அடியே! 

அத்தனை அத்தனை 

இசைக்கும் விருப்பம் 

உன் விரல் பற்றிட 


அத்தனை அத்தனை 

இசையும் வேண்டிடும் 

உன்
இதழ் ஒத்தடம் 

யார்ரா இந்த பொண்ணு?

யார்ரா இந்த பொண்ணு?
யார்ரா இந்த பொண்ணு?

வந்து நின்னு மாஜிக் பண்ணும்

யார்ரா இந்த பொண்ணு?

யார்ரா இந்த பொண்ணு?




பிடிச்சிருக்கு

பிடிச்சிருக்கு

உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு!

உன் கண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு!

கண்ணே உன்னை பிடிச்சிருக்கு! 




கன்னமெல்லாம் பிடிச்சிருக்கு!

கண்ணில் மின்னும்

நம்பிக்கைய  பிடிச்சிருக்கு! 




பார்த்தவுடன் பூத்த ஒரு 

புன்னகையை பிடிச்சிருக்கு!

ஓடி வந்து

குலுக்கிட்ட உன் கைகள்

ரொம்ப பிடிச்சிருக்கு 




எங்கிருந்து கொண்டு வந்தே?

அந்த ஒரு சந்தோசம்

பிடிச்சிருக்கு!

ரொம்ப பிடிச்சிருக்கு!




பொறுப்புடன்  உன்னை

பிடிச்சிருக்கு!

அதில் சேத்து வைச்சு கட்டி வைச்ச

பண்பதை  தான் 

பிடிச்சிருக்கு! 




உன்னை என்னை பிடிச்சிருக்கு!

ஊரு எல்லாம் பிடிச்சிருக்கு!

நாளு அது பிடிச்சிருக்கு!

கூட வரும் நாலு பேரு 

பிடிச்சிருக்கு!




பிடிச்சிருக்கு எல்லாம்

பிடிச்சிருக்கு!

எல்லாம் எனக்கு 

பிடிக்க வைக்க தான்

நீ ஜென்மம் எடுத்து வந்தீயா?

பிடிச்சிருக்கு எல்லாம்

பிடிச்சிருக்கு! 




உள்ளுக்குள்ள வந்து நின்னவளே

பிடிச்சிருக்கு!

கூட ஒரு இன்னிசையும்

பிடிச்சிருக்கு!



சேத்து வைக்க வந்தா போதும்

பிடிச்சிருக்கு! எல்லாம்

சேத்து வைக்க வந்தாய் நீயா
பிடிச்சிருக்கு!  

புதுசா பிறக்கும் ஊரு

திருவிழானு வந்தா பாட்டு சத்தம் கேக்கும் ஊருக்குள்ள மகிழ்ச்சி மடை வெள்ளமா திறக்கும் ராட்டினத்து கூட்டம் கலகலன்னு சிரிக்கும் துப்பாக்கியை தூக்...