[Intro]
வெள்ளி செவ்வாய்
ப்ளுட்டோ
குடியேற திட்டங்கள்!
வேறெங்கும் இடமிருக்கா
தொடருதே தேடல்கள்!
நெருக்கித்தள்ள தேவையில்லை
பிரபஞ்சம்
காத்திருக்கு நம்
காலு பட.
[Verse 1]
புது வீடு சாவி ரெண்டு
தகதகன்னு மின்னுதடி!
வாசல் முன்னே
படமெடுப்போம்
ஆனந்தம் அள்ளும்படி...
எனக்கொன்னு உனக்கொன்னு
கணக்கு உண்டா?
நமக்குன்னு வந்தது தான்
வாழ்க்கையடி
[Verse 2]
புது வீடு கதவெல்லாம்
திறந்தபடி கனவுலகம்
குடியேறி வருகிறதே !
என்காலு என் நிலத்தில்
நடந்தபடி
மேலேறி வான்வழியே
மிதக்குதடா !
நிலம் மேல கட்டிவைச்ச
வீடு வந்தா
குடம் குடமா அருவி கொட்டும்
மகிழ்ச்சியடா...
[Chorus]
ஓடியாடா இடமிருக்கு
சுத்தி சுத்தி...
மரம் செடியும் நட்டுவைப்போம்
படரும் படி!
பக்கத்துல வீடெல்லாம்
கைகொடுப்போம் !
சொர்க்கத்துக்கு வழிகிடைச்ச
சேதிசொல்லி!
[Bridge]
புது வீடு சாவி ரெண்டு
தகதகன்னு மின்னுதடி !
வாசல் முன்னே
படமெடுப்போம்
ஆனந்தம் அள்ளும்படி!
[Chorus]
இல்லமிது துரத்திடுமே
இல்லைகளை சுளுக்கெடுத்து
நல்ல வழி பிறந்ததுவே.
சாவி வழி வந்ததுவே!
சொந்தத்தில் வீடு
சொந்தத்தை கூட்டு...
கலகலன்னு பேசி
களைகட்டும் நாட்கள்!
No comments:
Post a Comment