Saturday, 21 March 2026

புதுசா பிறக்கும் ஊரு




திருவிழானு வந்தா பாட்டு சத்தம் கேக்கும்

ஊருக்குள்ள மகிழ்ச்சி மடை வெள்ளமா திறக்கும்


ராட்டினத்து கூட்டம் கலகலன்னு சிரிக்கும்

துப்பாக்கியை தூக்கி பலூனெல்லாம் வெடிக்கும்


ஊருக்குள்ள வந்து பக்கத்து ஊரு எல்லாம் கலக்கும்

ஊரை விட்டு போன சொந்தமெல்லாம் திரும்பும்


மறக்க முடியுமா திருவிழாக் காலம்

மகிழ மகிழ திருவிழாக் கோலம்


மறக்க முடியுமா திருவிழாக் காலம்

மகிழ மகிழ திருவிழாக் கோலம்




முளைப்பாரி தூக்கி பெருங்கூட்டம் போகும் பாரு

சுத்தி சுத்தி வந்து அது பாடும் பாட்ட கேளு


பால் குடத்தை தூக்கி வேண்டுதலோ நூறு

தீ மிதிச்சு நன்றி சொல்லி போகும் பாரு


பக்தி பாட்டு கேக்கும்

ஒரு குத்து ஆட்டம் ஆடு


புதுசு புதுசா கடைக

பொருளை வாங்கி சேரு




கரகாட்டம் பாக்க ஒரு கூட்டம் அது பாரு

இன்னும் பழைய கலைகள் காக்குறது ஊரு


பட்டிமன்றம் நைட்டு கலகலன்னு கூடும்

வாய்விட்டு சிரிச்சு யோசனைதான் ஜோரு


திருவிழா வந்தா தான் சாமி தேரு

மறுபடி புதுசா தான் பிறக்கும் ஊரு



திருவிழா வந்தா தான் நம்ம ஊரு

மறுபடி புதுசா தான் பிறக்கும் பாரு

Saturday, 14 March 2026

காக்கப் பிறந்த ஹீரோ

 டீச்சர் போல உண்டா?

ஆகப்போறேன் டீச்சர்

பாஸு போல ஜோரா

டீச்சிங் பண்ண கூலா


எங்க டீச்சர் போல உண்டா?

ஆகப்போறேன் டீச்சர்

பாஸு போல ஜோரா

டீச்சிங் பண்ணுவேன் coolஆ


கொஞ்ச நாளு கூட

நிக்கலையே ஸ்டெடியா!

பெரம்படிக்கும் மேல...

திட்டுவாங்கி காலி


ஹீரோ போல நானும்

Actor ஆக போறேன்

punch punch ஆ பேசி

அள்ளப்போறேன் claps


ரொம்ப நாலு ஆசை

தேஞ்சு தேஞ்சு கலைஞ்சு...

கனவு கன்னி கூட duet

ஆடப்போனேன்


அங்க இங்க அழகா

பொண்ணப் பாத்தா போதும்

வீணாப்போச்சு கனவு

காணாப்போச்சுகோலு


கலெக்டராகப் போறேன்

நாட்டை காக்க போறேன்

அரசியல் வாதி கூட

அப்ப அப்ப தோணும்


கெத்து சொத்து காட்டும்

Rowdy கூட ஓகே

டாட்டா போல ஆக

ஆசை கூட உண்டு


காசு சேக்க போறேன்

தரையில பறக்க போறேன்

இன்னும் இன்னும் பெருசா

ஆசை சேத்துக்கிட்டேன்



எல்லாம் சேத்து சேத்து வைச்சு

அப்பா ஆகிப்புட்டேன்...

எங்க அப்பா போல ஹீரோ

பாக்க மறந்துப்புட்டேன்



அப்பா தானே ஹீரோ

என்னை காக்கப்  பிறந்த ஹீரோ

அப்பா சூப்பர் ஹீரோ

எப்போவுமே ஹீரோ

Saturday, 7 March 2026

சுவாசக் காத்து



அடியே எனக்கு நீயடி

சுவாசக்  காத்து தானடி

விட்டு விலக முடியுமா

முட்டுமே மூச்சு தாங்குமா?


தனியே இயங்குற ஸிஸ்டமா

படைக்கலை ஆண்டவன் ஆணைம்மா

திமிரா  நடந்திட முடியுமா

தைரியம் தருபவ நீயம்மா


பிறந்திட காரணம் அவளம்மா

மறு உருவமா வந்தவ நீயம்மா

நிமிர்ந்திட வைச்சது நீயம்மா

முதுகெலும்பா இருப்பவ தானம்மா


சிப்ப பொருத்தி முதுகுல

மருத்துவம் பாக்குற உலகுல

ஜீன் தெரபி எனக்கு நீயடி

SMA சிகிச்சையும் தானடி


அடியே எனக்கு நீயடி

சுவாசக்  காத்து தானடி

விட்டு விலக முடியுமா

முட்டுமே மூச்சு தாங்குமா?


உண்பதை சேத்து வைக்கலாம்

நீரையும் காத்து வைக்கலாம்

உயிர்க்காத்தை சேத்து வைக்கவே

வழியேதும் இருக்கா சொல்லடி


ரெண்டு ரெண்டா நகருற

வேகம் பத்துமா வாழ்ந்திட

முப்பத்தாறு மடங்கா மாத்துற

எனர்ஜிய கூட்டிட வந்தவ


நீ இருக்கிற வரையில பூமிக்கு

ஆயுசு கூடிட வாழுமே

ஆயுசு நீண்டு நீயுமே

செய்யணும் அரிய செயலுமே

Friday, 6 March 2026

காலிப்பானை நண்டு சத்தம்



காலிப்பானை நண்டு சத்தம்

கேட்டு குவிஞ்ச நண்டு பத்தும்

மாட்டிக்கிட்டு தவிச்சு சுத்தும்

கணக்கு தம்பி மார்க்கெட் பக்கம்



அள்ளி அள்ளி காசைச் சேத்து

அலப்பறைல  கெத்து காட்டும்

தன்னைத் தானே மெச்சி பேசி

திரியுதுங்க கிறுக்கு கூட்டம்



அட்வைசு அள்ளிவிட்டு

காலரையும் தூக்கி விட்ட

அப்பரசிண்ட்டு பேச்சைக் கேட்டு

அள்ளிப்போட இருக்கு கூட்டம்


இருக்கதை தான் குவிச்சு சேத்து

அடுத்தவன்ட  பேச்சகேட்டு

அரண்டு திரியும் கூட்டம் ரெண்டு

அறிஞர் பட்டம் கேட்டு நிக்கும் 




காலிப்பானை நண்டு சத்தம்

கேட்டு குவிஞ்ச நண்டு பத்தும்

மாட்டிக்கிட்டு தவிச்சு சுத்தும்

கணக்கு தம்பி மார்க்கெட் பக்கம்



எனக்கும் உனக்கும் புரியாம  


புதுசு புதுசா கதையச் சொல்லும்  


கேள்வி கேட்டா பதிலு இல்லை 


கேட்டவனை மொறைச்சு பாக்கும்



வைச்சுக்கிட்டா வஞ்சம் பண்ணும்? 


தெரிஞ்சுக்கிட்டா மறைச்சு வைக்கும்? 


போற வழிக்கு தொணையத் தேடி 


இழுத்து போக வந்து நிக்கும்



பேச விட்டு கேட்டு பாரு 


மனசுக்குள்ள சிரிச்சு கேளு  


உன்னை போல அறிவாளி  


உலகிலில்லை சொல்லி ஓடு 



காலிப்பானை நண்டு சத்தம்

கேட்டு குவிஞ்ச நண்டு பத்தும்

மாட்டிக்கிட்டு தவிச்சு சுத்தும்

கணக்கு தம்பி மார்க்கெட் பக்கம்


சேக்குறவன் சேக்குறப்ப

வாழுறத பாப்போம் நாம

சேத்த பின்னே ஓடி வந்தா

வாழும் வழி சொல்லி வைப்போம்

Friday, 27 February 2026

மாநட்பு


காகிதமா 

புளகாங்கிதமா 

பழங்காலமென 

உணர்வாகிடுமா?



புது வாக்கியங்கள் 

உருவாக்கி வந்து

சரம் தொடுத்ததொரு 

அரும் சொற்றொடர்கள் 



அடுக்கி வைத்து 

அசை போட்டிடுமே 

மனக்கோலமது 

ராக்காலங்களில் 



மெல்லிசையை யார் 

பின்னிசைக்க 

நெகிழ் நேரமொரு 

தாலாட்டிடுமே 



இன்னுமொரு 

நாள் வருமே 

புதிதாக தரும்

புது புத்துணர்ச்சி 



இது போல 

பல நாள் பிறர்க்கும் 

கிடைத்தாகவே மனம் 

வேண்டிக்கொண்டேன் 



அந்த நல்லிசையை 

இசைக்கவல்ல

இசை கருவியென 

தெரிந்தவர்கள் பல 

பண்பிலுயர் மாநட்பு 

அது எனக்கும் உண்டு 




Sunday, 22 February 2026

கலாம்



[Chorus] 

கலாம் கலாம்

அறிவுக்கு முகமே 

அறிவியல் களமே 

உலகக்கண்ணில் இந்திய முகமே


[Verse 1] 

விண்வெளி கலங்கள் 

படைத்திட்ட கரமே 

யாவரும் கேளிர் 

உரைத்திட்ட குணமே 


எளியதோர் குடும்பம் 

பிறந்திட்ட கோவே 

அரியதோர் செயல்கள் 

படைத்திட்டாய் நீயே


[Verse 2] 

தூங்கிய கனவுகள் 

விழித்திட வந்தாய் 

நிகழ்த்திடும் கனவுகள் 

விளைந்திட செய்தாய்


புன்னகை ஏந்திய 

உன்முகம் கண்டோர் 

புதையலை கண்டதாய் 

சொல்லிட செய்தாய்


[Chorus] 

கலாம் கலாம் கலாம்

அறிவுக்கு முகமே 

அறிவியல் களமே 

உலகக்கண்ணில் இந்திய முகமே



[Verse 3] 

மேடைகள் பலப்பல 

காத்திட்ட போதும் 

பிள்ளைகள் வென்றிட 

ஆவல்கள் கொண்டாய்


ஏங்கிய கண்களில் 

இலக்குகள் விதைத்தாய் 

அன்பினால் வெல்லலாம் 

வாழ்ந்து நீ சொன்னாய்


[Anthem / Climax] 

எம்மை விட்டு நீ 

செல்வது இல்லை 

என்னுடன் யாவுமாய்

 நீயே எங்கும்

வாழ்கிறாய் இன்றும் 


கலாம் கலாம் கலாம் 

சிரிக்கலாம் சிந்திக்கலாம் 

பேர் எடுக்கலாம் 

பிறர்க்கெலாம் கொடுக்கலாம் 

தமிழில் பிறந்ததால் 

என்றும் எங்கும் ஜெயிக்கலாம் 


ஜெய் ஜெய் கலாம் 

நீ சொன்னது கேட்டால் 

எளிதாய் எங்கும் 

நிலைப்பெற ஜெயிக்கலாம்

tasty பிரச்சினை


 

பெரும் கவிதை

குழந்தை மொழிகள் கேட்க 
பெரும் கவலை ஓடும் தூரம் 
மொழிகள் எல்லாம் தேடும் ஒரு
மழலைப்  பேச்சின்  வாசம்


விழிகள் பாதி பேசும் 

விரல்கள் கோர்த்து பேசும் ஒரு 

குழந்தை மொழியை வெல்ல 

ஏதும் இசைதான் உண்டா  சொல்லு 



சின்ன சின்ன சின்ன கவிதைகளை

தினம் அள்ளி அள்ளித் தரும்

குழந்தைகளே 


வண்ண வண்ண கனா 

கண்களிலே - நாளை 

பிண்ண பிண்ண தினம் 

படித்திடுங்கள் 


பள்ளிக்கூடம் செல்லும் 

சாலைகளில் நீங்கள் படித்திட 

பல பாடமுண்டு 


சொல்லித்தரும் நல் ஆசிரியர் 

உடன் கற்றுக்கொள்ள பல 

பழக்கமுண்டு 


அன்னை தந்தையுடன் 

தினம் பேசிடுங்கள் 

நல்ல நல்ல வழி 

பிடித்திடுங்கள் 


அக்கம் பக்கமென 

நடப்பவைகள் 

அது என்ன என்னவென 

மிக கற்றிடுங்கள் 


நட்புகளை தினம் 

சேர்த்து வைத்து 

புதுப் புது வழிகளும்

பிடித்திடுங்கள் 



சொந்தங்களை கொஞ்சம் 

படித்திடுங்கள் 

சொந்தக் காலுக்கென நிதம்

படித்திடுங்கள்  


வண்ண வண்ண கனா 

கண்களிலே - நாளை 

பிண்ண பிண்ண வந்த  

செல்லங்களே 


அவர் செய்பவற்றை

நீயும் செய்திடவே

கிளிப்பிள்ளையில்லை!

மிக தெளிந்திடுங்கள்


உனக்கென பலர்

சேர்த்து வைத்த 

பொக்கிஷத்தை தேடி 

சேர்த்திடுங்கள் 


யாரும் கொள்ளையிட்டு 

செல்ல வழி விட நீ 

பேபி பூமெர்ஸில்லை 

சொல்லிடுங்கள் 


உன்னை நம்பியொரு 

பெரும் காலம் இருக்குது 

படைத்திடுங்கள்

எனக்கென பிறந்தது



எனக்கென பிறந்தது
 
உலகம் - நான் 
வரும்வரை நடந்ததே  
பெருந்தவம்! 


நொடிக்கென நிகழ்வுகள் 

தினம் - எனை 

வார்த்திட நடப்பதே அதும்! 


நிகழ்ந்தன கேட்டிட 

கதை, புதையலை 

கொட்டிடும் தினம்!


நான் நடந்திட 

திளைத்திடும் தரை! 

ஓடிட நீட்டுமே  

கரம்! 


தமிழ் சொற்களில் 

வழிந்திட சுவை... 

கேட்டிட தழுவிடும்  

வளி!


பல தூரமே 

உடைத்திடும் படி 

தினம் அறிவியல் 

செய்திடும் பணி! 



அதி காலையில் 

விழித்திட ஒளி! 

தாலாட்டவே மிதந்திடும் 

நிலவொளி!


எனை சுற்றியே 

சுற்றிடும் படி 

பிறந்ததோ பூமியுமடி!


என் விழி பட்டிடா 

பாகங்கள் தனில்... 

நோன்புகள் கிடந்தொரு

தவம்!


எனக்கென பிறந்தது 

உலகம் - நான் 

வரும்வரை காத்ததே   

தவம் 


நான் பிறந்திட 

கிடைத்தன வரம் 

என் கூடவே வாழ்ந்திட 

நிதம்

வேண்டுதல் கேட்டிடும் 

மண்டிலம் 

 

எனக்கென பிறந்தது 

உலகம் - எனை 

பெற்றதே பெற்றதே 

அதும்!

புதுசா பிறக்கும் ஊரு

திருவிழானு வந்தா பாட்டு சத்தம் கேக்கும் ஊருக்குள்ள மகிழ்ச்சி மடை வெள்ளமா திறக்கும் ராட்டினத்து கூட்டம் கலகலன்னு சிரிக்கும் துப்பாக்கியை தூக்...